Saturday, 14 April 2012

The TNM Trust  web  site is completing  one year on 05/05/2012. It is extending the matrimonial services to mukkulathor community. Now total 141 bridegrooms and 109 brides have been registered in  TNM Trust.

Saturday, 18 February 2012

Sri Ganapathy thevar in a marriage function with sri Gurusamy JUDGE and sri Kalasalingam(chairman of kalasalingam university) in year 1987...

Friday, 17 February 2012

About us


About Us 
 
தேவர் நற்பணி மன்றம் அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்க்கிறது.
  "தேவர் நற்பணி மன்றம்" மதுரை கிளை சார்பதிவாளர் எண் .4. அவர்களால் ஆவண எண். 2131 நாள் 21.11.2007ல்  அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது.
   திருமணத் தகவல் சேவையோடு, அனைத்துத் தரப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் மேலும் சில நற்பணிகளை செயல்படுத்த அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
1. மாணவர்களின் உயர் கல்வியை தடையில்லாமல் படித்து முடிக்க வழி செய்தல்.2. படிப்பு முடித்ததும் தகுந்த வேலையில் சேருவதற்கு உதவி செய்தல்.
3. மத்திய, மாநில அரசின் தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகள், நேர்காணல்களில் பங்கு கொண்டு வெற்றி பெற வழி  காட்டுதல்.
4. இந்திய அரசுப்பணிகளில் சேர உரிய பயிற்சி அளிக்கும் மையம் ஒன்று ஆரம்பித்தல்.
அறக்கட்டளை கீழ்கண்ட நிர்வாகிகளால் நிர்வகிக்கப் படுகிறது.
 
 
    
 
நிர்வாகிகள்
 
   
    
 

Trust History
தேவர் நற்பணி மன்றம் அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்க்கிறது.
          "தேவர் நற்பணி மன்றம்" கடந்த 30 ஆண்டுகளாக தனது ஒப்பற்ற சேவையால் எண்ணிலடங்காத் திருமணங்களை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
      தன் நிறுவனர் உயர்திரு க. கணபதித்தேவர் அவர்கள் 15.01.1912ல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள வத்திராயிருப்பு என்னும் கிராமத்தில் பிறந்தார். அவ்வூர் இந்து உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்ததும் அரசாங்க வேலை கிடைத்து சென்னையில் சிறிது காலம் பணிபுரிந்து பின் தேசீயப் பற்றுதலால் அரசாங்க வேலையை உதறிவிட்டு இந்தி பிரச்சார சபையில் இந்திப்பண்டிட் பட்டம் பெற்று இராமநாதபுரம் சமஸ்தானத்து "இராஜா உயர்நிலைப்பள்ளியில்" சில ஆண்டுகள் இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்த பின் மாற்றலாகி ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து உயர்நிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்தார். இவர் ஏற்கனவே தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமையும், ஆங்கிலம் மற்றும் சமய இலக்கியத் துறைகளில் நல்ல ஞானமும், மேடைகளில் பேசும் ஆற்றலும் பெற்றவர். தீவிர காந்தியவாதியான இவர் கதராடை உடுத்தி, பொய் பேசாமை, புலால் உண்ணாமை ஆகிய கொள்கைகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்தவர். இவரது துணைவியார் திருமதி. சாந்தா லெஷ்மி அம்மையாரும் தனது கணவரின் சேவையில் முழுமையாகப் பங்கு கொண்டு ஏழை, எளிய மாணவர்கட்கு அன்னமிட்டு, பள்ளிக்கு அனுப்பி, படிக்க வைத்து வாழ்க்கையில் வழிகாட்டியாக விளங்கினார்கள். ஆசிரியராகப் பணிபுரியும் பொழுது விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் முக்குலத்து மாணவர்களையும், பெற்றோர்களையும் நேரில் சந்தித்து படிப்பில் ஆர்வமூட்டியும், தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வந்தார்கள்.

          வரைப்போல் முக்குலத்துச் சான்றோர் பலர் தனிப்பட்ட முறையிலும், பல சமூக அமைப்புகள் மூலமாகவும், தமிழ்நாடு முழுவதும் கள்ளர், மறவர், அகமுடையார் இனத்தோரின் மாணவர்கட்கு உயர்கல்விக்கு பொருளாதார உதவி செய்தல், படித்த இளைஞர்கட்கு வேலைவாய்ப்பில் உதவி செய்தல் போன்ற இன்ன பிற சேவைகள் செய்து வந்தாலும் திருமண வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் ஓர் அமைப்பை சான்றோர் பலரின் விருப்பத்தின்படி "தேவர் நற்பணி மன்றம்" என்ற பெயரில் 1981 ஆம் ஆண்டு திருவாளர் க. கணபதித்தேவர் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில்ஆரம்பித்தார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் நடத்தி வந்த பொழுது முக்குலத்து சமுதாய பெருமக்களின் வேண்டுகோளின் படி தேவர் நற்பணி மன்றம் மதுரை திருநகரில் 1986 முதல் இயங்கி வருகிறது. மன்றத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை ஈரோடு தொழிலதிபர் உயர்திரு எம்.ஜி. அப்பாவு Landscape Consultant அவர்கள் அச்சடித்து நன்கொடையாக வழங்கினார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12 பேர் அங்கத்தினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவினர் ஆய்வு செய்து தேர்ந்தெடுத்து வசதியற்ற தேவர் குல மக்கட்கு இலவச கூட்டுத் திருமணங்களை பெரியோர்கள் முன்னின்று தமிழகமெங்கும் நடத்தி வைத்தார்கள். தேவரினப் பெருமக்களின் ஆதரவாலும், ஆசியாலும் மன்றம் நல்ல வளர்ச்சியடைந்து உன்னத சேவை செய்து வரும் ஓர் ஒப்பற்ற அமைப்பாக உருவாகியுள்ளது.
   ப்படிப்பட்ட அமைப்புகள் எத்தனையோ தோன்றினாலும், தோற்றுவித்த சான்றோருக்குப் பின் சேவை மனப்பான்மையுள்ள பின்வாரிசுகள் வாய்க்காமல் அவைகள் தொடர்ந்து செயல்பட முடியமால் போன கடந்த கால வரலாறுகளை நாம் அறிவோம். அவ்வாறில்லாமல் "தேவர் நற்பணி மன்றம்" தனது பணியை விரிவுபடுத்தி ஏற்கனவே செய்து வரும் திருமணத்தகவலோடு மேலும் சில சேவைகளில் ஈடுபடுத்திக் கொள்ள திருவாளர் க. கணபதிதேவர் அவர்களின் பின்வாரிசுகள் முடிவு செய்தனர். அதன்படி "தேவர் நற்பணி மன்றம்" 2007 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக மதுரையில் பதிவு செய்யப்பட்டது.